திரைச்செய்திகள்
Typography

இந்த வாரம் திரைக்கு வரப்போவதாக சொல்லப்பட்ட படம் விழித்திரு.

ஆனால் கடைசி நேரத்தில்தான் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுவிட்டதே? இப்படத்தின் பிரஸ்மீட்டில் சாய் தன்ஷிகா தன்னை மதிக்கவில்லையென டி.ராஜேந்தர் ஆத்திரப்பட்ட கதை நாடே அறிந்ததுதான்.

தன் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக டி.ஆர் பேசிய பேச்சில் அழுதே விட்ட தன்ஷிகா அவர் காலில் விழுந்து மேடையிலேயே மன்னிப்பும் கேட்டதுதான் பெரிய விஷயம்.

இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் வீடியோவாக பரவ பரவ... டிஆரின் மானத்தை கப்பலேற்றினார்கள் ரசிகர்கள்.

தன்ஷிகா ஆர்மி என்று வாட்ஸ் ஆப், ட்விட்டரில் ஒரு குருப்பை உருவாக்கி, டிஆருக்கு அசிங்காபிஷேகம் பண்ணினார்கள்.

இது குறித்து கருத்தை அறிய தன்ஷிகாவுக்கு போன் அடித்தால், யாரோ ஒரு ஆண் எடுத்து ‘மேடம் ஊர்ல இல்லேங்க’ என்று என்றே சொல்லி வருகிறார்.

நிஜத்தில், “யாரு போன் பண்ணினாலும் எடுக்காதேம்மா” என்று கூறியிருக்கிறாராம் அப்படத்தின் இயக்குனர் மீரா கதிரவன்.

மறுபடியும் சிங்கத்தை சீண்டறதுக்கு இந்த மெளன விரதமே பெஸ்ட்!

Most Read