திரைச்செய்திகள்
Typography

பிரபல பாடகர் விஜய் யேசுதாசும், நடிகர் தனுஷும் நெருக்கமான நண்பர்கள்.

மாரி படத்தில் கூட ‘வேணாம் வேணாம்’ என்று ஒதுங்கிப் போன விஜய்யை நடிக்க வைத்து அழகு பார்த்தார் தனுஷ்.

அவர் போட்ட பாதையில் முழு ஹீரோவாகவே பயணிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய் யேசுதாஸ். படைவீரன் என்ற படத்தில் இவர்தான் ஹீரோ.

இந்த நேரத்தில்தான் தன் நட்புக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார் தனுஷ். அண்மையில் இப்படத்தை நேரம் ஒதுக்கிப் பார்த்தவர், “படம் நல்லாயிருக்கு.

நானே என் பேனர்ல ரிலீஸ் பண்ணித் தர்றேன். கொஞ்சம் கூட கமிஷன் வேணாம். என்ன கலெக்ஷன் வருதோ, அப்படியே உங்களுக்கு” என்று கூறியிருக்கிறாராம். இதைவிட வேறென்ன வேணும் நட்பே?

Most Read