திரைச்செய்திகள்
Typography

கும்கி படத்தின் பார்ட் 2 வேலைகள் சைலன்ட்டாக நடந்து வருகின்றன.

இதில் லட்சுமிமேனனுக்கு பதிலாக நடிக்க கமிட் ஆன ‘இதுதான்டா போலீஸ்’ ராஜசேகர்- ஜீவிதா தம்பதியின் மகள், இப்போது அதில் இருக்கிறாரா என்றால் ‘இல்லை’ என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

ஏன்? டைரக்டர் முறையாக தகவலை அறிவிப்பதற்கு முன்பே இவர் ஒரு இன்டர்வியூவில் ‘நான்தான் அந்த கேரக்டரில் நடிக்கிறேன்’ என்று கூறிவிட்டாராம்.

படக்கென படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார் டைரக்டர் பிரபுசாலமன். சுண்ணாம்பு சிவக்கலேன்னா வெற்றிலை தோட்டத்தையே அழிக்கிறளவுக்கு ஆத்திரக்காரரா இருப்பாரு போல? ஏண்ணே இதெல்லாம் ஒரு தப்பா?

Most Read