திரைச்செய்திகள்
Typography

குட்டி நயன்தாரா என்று கொண்டாடப்பட்ட நஸ்ரியாவுக்கு நடந்த திடீர் திருமணம், தமிழ் மலையாள ரசிகர்களுக்கு பேரதிர்ச்சிதான்.

தேவதையே... திரும்ப வா என்று போஸ்டர் அடிக்காத குறையாக புண்பட்ட ரசிகர்களுக்கு இப்போதுதான் தவத்தின் முழு பலனும் கிட்டப் போகிறது.

காதல் கணவர் பகத் பாசில், மீண்டும் சினிமாவில் நடிக்க அனுமதித்திருக்கிறாராம்.

முன்பு போல துள்ளல் கேரக்டர்கள்தான் வேண்டும் என்று நஸ்ரியா நினைப்பதால், அதற்காக கதை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் இங்கேயும் அங்கேயும்.

பழைய குடை, புதிய புயல். தாங்குமா?

Most Read