திரைச்செய்திகள்
Typography

முன்பெல்லாம் நாட்டில் எந்த அசம்பாவிதங்கள் நடந்தாலும்,

‘இந்த சம்பவத்தை பின்னணியாக கொண்டு செல்வமணி படம் எடுக்கப் போறாராம்’ என்றொரு தகவலை தட்டிவிடுவார்கள். (மிஸ்டர் மணியும் அதை மறுக்க மாட்டார்) இப்போது அந்த இடத்தில் சிம்புவை வைத்து அழகு பார்க்கிறது புரளியாளர்களின் மனசு.

வெளிமாநிலத்தில் எந்தப்படம் ஹிட்டடித்தாலும், ‘அதை தமிழில் ரீமேக் செய்து நடிக்கப் போகிறாராம் சிம்பு’ என்று தகவலை தட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

சமீபத்தில் வந்து பலே ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம் குறித்துதான்  இப்படியொரு தில்லாலங்கடி தகவல். சிம்பு தரப்பில் விசாரித்தால், ‘அண்ணன் இன்னும் அந்தப்படத்தை பார்க்கவே இல்லீங்க’ என்கிறார்கள். முடிஞ்சுப்போன வரலாறுக்கு முன்னுரை எழுதலாம். பின்னுரை எதுக்குங்க?

Most Read