திரைச்செய்திகள்
Typography

சென்ட்டிமென்ட் காரணமாக இப்படி தள்ளி தள்ளிப் போடுகிறாரோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது சிவகார்த்திகேயனின் நடவடிக்கை.

சிவா படத்திலேயே ‘ரஜினி முருகன்’ படத்திற்கு மட்டும்தான் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக படம் திரைக்கு வந்தது.

பட்... படு பயங்கர ஹிட்! ஒருவேளை அதே நினைப்பாக கூட இருக்கலாம்.

‘வேலைக்காரன்’ படம் ஆயுதபூஜை விடுமுறைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்.

அதற்கப்புறம் அந்த எண்ணத்தை ஓரத்தில் கடாசிவிட்டு படத்தை தீபாவளிக்கு கொண்டுவரலாம் என்று நினைத்தார்.

தற்போது அதிலும் மாற்றமாம். பேசாம டிசம்பருக்கு வந்தாலென்ன என்று யோசிக்கிறாராம்.

ஏன்... அப்படியே காத்திருந்தா கொஞ்ச நாள்ல அடுத்த வருஷ பொங்கலே வந்துரும். அப்ப விடலாமே?

Most Read