திரைச்செய்திகள்
Typography

‘தரமணி’ ஹிட்டுக்குப் பின் இன்னும் ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை ஆன்ட்ரியா.

ஏன்? வந்தால்தானே ஒப்புக் கொள்வதற்கு? எப்பவும் ஒரு படம் பேசப்பட்டுவிட்டதென்றால், அதையே நூல் பிடித்துக் கொண்டு வருகிற இயக்குனர்கள்தான் அதிகம்.

ஆன்ட்ரியாவுக்கும் அதேதான் நடக்கிறதாம். “மேடம்... நீங்க புருஷனை விட்டு தனியா...” என்று ஆரம்பிக்கும் போதே ‘ஸ்டாப்’ பட்டனை அழுத்திவிடும் ஆன்ட்ரியா,

“கலகலன்னு ஒரு கதை சொல்லுங்கப்பா” என்கிறாராம்.

‘ஆன்ட்டி ரேஞ்சுக்கு போய்விட்ட ஆன்ட்ரியாவை வச்சுக்கிட்டு வேறென்ன கதை பண்றது?’ என்கிறது இயக்குனர்களின் முணுமுணுப்பு.

வளையலா இருந்தா வட்டமா இருக்கும்பாய்ங்க. சட்டமா இருந்தா சதுரமா இருக்கும்பாய்ங்க. இதானேய்யா கோக்குமாக்குங்கறது

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்