திரைச்செய்திகள்
Typography

‘விவேகம்’ படத்திற்கு யாராவது நெகட்டிவ் விமர்சனம் எழுதினாலோ, சொன்னாலோ அவர்களை ஏழு தலைமுறைக்கும் மறக்க முடியாதளவுக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அஜீத் ரசிகர்கள், யு ட்யூபில் விமர்சனம் செய்து வரும் மாறன் என்பவரை கிழித்து தொங்க விட்டுவிட்டார்கள்.

பல மாதங்களாகவே இவர் மீது எரிச்சலில் இருந்த சினிமா பிரபலங்களும் இந்த லிஸ்ட்டில் தன்னை இணைத்துக் கொண்டது தனி.

ஆனால் கடந்த சில வாரங்களாக யு ட்யூபில் சினிமா விமர்சனம் கூறி வரும் பிரபல எழுத்தாளர் சாரு நிவேதாவுக்கும் அப்படியொரு சங்கடம்.

விவேகம் படம் சுமார் என்று விமர்சித்தவரை, காது கிழிந்து மனசு அறுந்து தொங்குகிற அளவுக்கு பிராண்டிவிட்டார்கள் பிராண்டி.

‘சே... இவ்வளவு கேவலமா ரியாக்ட் பண்ணுவாங்கன்னு நினைக்கலே’ என்று கவலைப்பட்டவர், யு ட்யூப் ஏரியாவிலிருந்தே நடையை கட்டிவிடலாமா என்றும் யோசிக்கிறாராம்.

அஜீத் நல்லவரா இருக்கலாம். அவரை பின்பற்றும் ரசிகர்கள் அப்படியில்லையே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்