திரைச்செய்திகள்
Typography

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்திற்கு தமிழகத்தின் மூன்று முன்னணி நாளிதழ்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து இன்டஸ்ட்ரியில் புகைச்சலை கிளப்பியிருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

தயாரிப்பாளர் சங்கத்தில் இது பெரும் வெடியாகவும் வெடித்தது.

அந்த குற்றத்திற்கே இன்னும் தீர்ப்பு வரவில்லை.

அதற்குள் ‘விவேகம்’ படத்திற்காக முன்னணி நாளிதழ் ஒன்றில் மூன்று பக்க விளம்பரம் கொடுத்துவிட்டது சத்யஜோதி நிறுவனம்.

மறுபடியும் புகைச்சல். “நீங்க அதை கேட்டீங்களா, இதை கேட்க?” என்று பதிலளித்துவிட்டு அமைதியாகிவிட்டாராம். ஆ

க மொத்தம்.... பணமிருந்தா பல் இல்லாதவங்களும் பக்கோடா திங்கலாம். போங்கய்யா நீங்களும் உங்க ரூல்ஸ் புக்கும்?

Most Read