திரைச்செய்திகள்
Typography

நயன்தாராவின் மறைமுக தயாரிப்பில் உருவாகி வருகிற ‘அறம்’ படம், அவருக்கு வரமா, சாபமா? என்பது ரிலீசுக்கு பின்புதான் தெரியவரும்.

ஆனால், இந்தப்படத்தை வெளியிடுவதற்குள் ஓராயிரம் குழப்பங்கள் சூழ்ந்து, ஈராயிரம் அவஸ்தைகளுக்கு ஆளாகிவிடுவார் போலிருக்கிறது நயன்.

நான் சொன்னால் இந்தப்படத்தை ரிலீஸ் செய்து கொடுக்க ஆயிரம் பேர் க்யூவில் நிற்பார்கள் என்கிற அவரது எண்ணத்தில் விழுந்தது செம அடி.

எந்த முன்னணி சினிமா நிறுவனங்களும் இப்படத்தை மொத்தமாக கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

இந்த நேரத்தில்தான் இன்னொரு குழப்பம். படத்தை எடுத்தவரைக்கும் போட்டுப்பார்த்த நயன் உதட்டை பிதுக்க.... அவரது காதலர் விக்னேஷ் சிவனே உள்ளே குதித்து படத்தை செதுக்க ஆரம்பித்திருக்கிறார்.

இதோ- விக்கியின் ஆலோசனைகளை ஏற்று ரீ ஷுட்டிங் கிளம்பிவிட்டார் ‘அறம்’ இயக்குனர் கோபி நைனார்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்