திரைச்செய்திகள்
Typography

விஐபி 2 படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

ஒரு காலத்தில் ஊ... லலல்லா... என்று மின்சாரக் கனவு படத்தில் கூவிய கஜோலுக்கு இப்படத்தில் அதி முக்கியமான ரோல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

நீலாம்பரியை நினைவு படுத்துகிற மாதிரி இருக்கும் என்று அப்படத்தின் இயக்குனர் சவுந்தர்யா ரஜினியே சர்டிபிகேட் கொடுக்கிற அளவுக்கு முக்கிய ரோல்.

இருக்கட்டும்... ஆனால் அவர் தினந்தோறும் தயாரிப்பாளருக்கு வைத்த செலவு பற்றிதான் வயிறு எரிகிற அளவுக்கு வாயடிக்கிறது கோடம்பாக்கம்.

கஜோலுக்கு செக்யூரிடிக்கு, மற்றும் உதவிக்கு என்று வரும் ஆறு பேருக்கு மட்டும் தலா மூன்று லட்சம் பில் போடப்பட்டதாம்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், அது எங்கேயோ போய் நிற்கிறதாம்.

படத்தை இந்திக்கு பார்சல் பண்ண நினைத்தால், இதுபோன்ற இம்சைகளை சகித்துக் கொண்டுதானே ஆக வேண்டும்?

Most Read