திரைச்செய்திகள்
Typography

ரஜினியின் கட்சி பிரவேசம் நிச்சயம் நிச்சயம் என்று அரசியல் உலகத்திலும் சினிமாவுலகத்திலும் மாற்றி மாற்றி வரவேற்பு வந்தனங்கள் அணிவகுக்கிறது. அவரோ, தன் அடுத்தடுத்த படங்களை முடிவு செய்யும் முக்கிய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

மிக சமீபத்தில் அவர் கதை கேட்டு, கண்டிப்பா பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்திருப்பது வெற்றிமாறன் படத்திற்குதானாம். இந்த படத்தை தனுஷே தயாரிப்பார் என்பதுதான் இப்போதைய தகவல். ஓவர் டூ தமிழருவி மணியனய்யா... கேட்குதுங்களா? அதிருக்கட்டும்... ரஜினி மீது கடும் எரிச்சலில் இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். ஏன்? ஆர்.கே.செல்வமணியை அழைத்த ரஜினி, காலா ஷுட்டிங் போற இந்த நேரத்தில் ஸ்டிரைக்குன்னு அறிவிச்சுருக்கீங்களே. இது சரியா? என்றாராம். அதோடு விட்டிருந்தால் கூட ஓ.கே. நம்ம படம் முடியட்டும். அப்புறமா ஸ்டிரைக் பண்ணிக்குங்க என்றாராம். காலா படத்தை தனுஷ் அல்லாமல் வேறு யாராவது தயாரித்தால் ரஜினி இது கூட சொல்லியிருக்க மாட்டார் என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்