திரைச்செய்திகள்
Typography

சின்னத்திரையில் நடிக்க வந்த கே.பாக்யராஜ், வந்த வேகத்திலேயே பேக்கப்.

ஏன்? ஒரு காலத்தில் திரைக்கதை மன்னனாக இருந்தவர், இப்போதும் அதே கோதாவுடன் கதைகளை டீல் பண்ணுவதால்தான்.

இந்த சீரியலின் இயக்குனர் ஒரு கதையை சொல்ல, அந்தக்கதையில் இதை மாற்றணும், அதை மாற்றணும் என்று சொல்லிக் கொண்டே இருந்தாராம் கே.பாக்யராஜ்.

சினிமான்னா மூணு மாசத்தோட போயிடும். சீரியலாச்சே? வருஷக்கணக்கா சேர்ந்து டிராவல் பண்ணணும்.

இப்பவே இவ்ளோ குடைச்சல்னா...? பட்டென சுதாரித்துக் கொண்டவர், “பாக்யராஜ் வேணாம் சார்.

ஆளை மாத்துங்க” என்று டி.வி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தாராம்.

முடிவு இப்போது சேனல் கைகளில். எலிமினேஷன், பாக்யராஜுக்கா? சீரியல் டைரக்டருக்கா? பின்னணி கதையே பெரிய டேர்னிங் கொடுக்குதே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்