திரைச்செய்திகள்
Typography

விஷாலுக்கு வானளாவிய புகழ் மாலை சூட்ட ஆரம்பித்துவிட்டது தயாரிப்பாளர்களின் மனசு.

காரணம் பெப்ஸியுடனான ஒப்பந்தம் ரத்து என்று அறிவித்தாரல்லவா?

அதனால்... இனி அவரவர் விரும்பிய எண்ணிக்கையில் விரும்பிய ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னாலும் சொன்னார்.

பெப்ஸி அமைப்பில் யுத்தம் வெடிக்காத குறை.

முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

இது ஒருபுறமிருக்க, “ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தத்தை மீண்டும் அமல் படுத்தினால், தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தே விலகிவிடுவேன்” என்று அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு.

சொந்த விரலே கண்ணை குத்தும் போலிருக்கே என்று கவலையில் ஆழ்ந்திருக்கிறார் விஷால்.

நான் புடிச்ச நண்டுக்கு காலே இல்ல என்று கப்சிப் ஆகிவிட்டால், தயாரிப்பாளர் சங்கத்திற்கு மட்டுமல்ல. விஷாலுக்கே நல்லது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்