திரைச்செய்திகள்
Typography

‘ஈயடிச்சான் காப்பியை விட்டு ஒரு ஸ்டெப் கூட முன்னேற மாட்டேங்குதே இந்த தமிழ்சினிமா?’ என்று கவலைப்படும் ஒரு சில நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

கொஞ்சம் வித்தியாசமான சப்ஜெக்ட் என்றால் தனது ஹீரோ இமேஜையும் ஓரம் தள்ளி வைக்கிற அளவுக்கு ஸ்மார்ட்.!

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி போன்ற படங்களை இயக்கிய அருண்குமார் மூன்றாவதாக ஒரு கதை சொல்ல, “ஆஹா... இதுவல்லவோ கதை.

ஆனால் இப்ப உடனே டேட்ஸ் இல்ல. ஜீவாவை பாரு... இல்லேன்னா சசிகுமாரை பாரு...” என்று சொல்லி அனுப்பினாராம்.

போன இடத்தில்தான் பொசுங்கல் வாடை. “இதெல்லாம் ஒரு கதையா?” என்று அவமானப்படுத்தி அனுப்பினார்களாம் இருவரும்.

கொதித்தெழுந்த விஜய் சேதுபதி, “நானே நடிக்கிறேன்.

இந்த படத்தின் அருமையை அவங்களுக்கு புரிய வைக்கிறேன்” என்று அருண்குமாருக்கு ஆபிஸ் போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இது விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு. ரிஸ்கோ, ரஸ்கோ. சேதுவின் முடிவுக்கு ஒரு வெற்றியை பார்சல் கட்டுங்கப்பா...

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்