திரைச்செய்திகள்
Typography

அரசியலுக்கு வருவதற்கு முன்பே நாட்டு அரசியலை போட்டு போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார் குஷ்பு.

அவரது கருத்துக்கள் சிலவற்றிற்கு எதிர்ப்புகள் எழ எழ... ஒரு பாதுகாப்புக்காக படீரென அரசியலில் குதித்தார்.

இன்று தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முகம் குஷ்புவினுடையது. அதே நிலைமையை கஸ்தூரிக்கும் வழங்கும் போலிருக்கிறது நாடு.

ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி ஒரு காட்டமான கருத்தை தெரிவித்தவருக்கு நாலா புறத்திலிருந்து நறுக் சுருக் அம்புகள்.

இதையெல்லாம் அருகிலிருந்து கண்டு களிக்க முடியாமல் அமெரிக்காவுக்கு பறந்துவிட்டார் அவர்.

வருஷத்தின் பாதி நாட்கள் அங்கேதான் இருப்பாராம்.

அங்கிருந்தபடியே மாட்டிறைச்சி சம்பந்தமாக இன்னொரு கருத்தை தட்டிவிட்டிருக்கிறார்.

இதற்காகவும் பொலபொலவென பிடித்துக் கொண்டார்கள் சோஷியல் மீடியாவில். போகிற வேகத்தை பார்த்தால் கடைசி தஞ்சம் அரசியல்தானா கஸ்தூரி?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்