திரைச்செய்திகள்
Typography

சுமார் 300 கோடி செலவில் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ என்கிற சரித்திரப்படத்தில், ஸ்ருதிஹாசன் ஹீரோயினாக நடிப்பதாக இருந்ததல்லவா?

இதற்காக லண்டனில் வாள் பயிற்சியெல்லாம் எடுத்துக் கொண்டார் ஸ்ருதி.

அவ்வளவும் வீண். என்னாச்சு?

படத்திலிருந்து ஜென்ட்டிலாக விலகிக் கொண்டார் ஸ்ருதி.

300 கோடியை புரட்ட முடியாமல் அவஸ்தை படுகிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

இதற்காக பைனான்சியரை பிடிப்பதற்காக கேன்ஸ் திரைப்பட விழா அரங்கத்தில் என்னென்னவோ வித்தைகள் காட்டியவர்கள், அங்கேயே தங்கியும் விட்டார்கள்.

அப்படியிருந்தும் பைனான்ஸ் விஷயத்தில் பாசிட்டிங் மூவ் நடக்கவேயில்லையாம்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த ஸ்ருதி, அல்வாவை கிண்டுறதுக்கு முன்னாடியே ஆள் வருவாங்களான்னு காத்திருப்பதில் அர்த்தமேயில்லை.

நான் கிளம்புறேன் என்று கிளம்பியிருக்கிறார். இந்த முதல் சறுக்கலை சற்று அதிர்ச்சியோடு எதிர்கொண்ட சங்கமித்ரா, ஜெயிப்போம்டா... என்று பிடிவாதமாக ‘நெட்’ வீசிக் கொண்டிருக்கிறது.

‘நெட்’டமில்லாம திரும்பி வாங்க!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்