திரைச்செய்திகள்
Typography

ஜுன் 1 ந் தேதியிலிருந்து ‘விவேகம்’ படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பம் ஆகியிருக்கிறது.

முதலில் அஜீத் பேசுகிறார். இந்த வேலைகள் ஒருபுறமிருக்க, வேதாளம் படத்திற்கு ட்ரெய்லர் கூட வெளியிடாமல்தான் படமே வெளியானது.

இதில் பெருமளவு அப்செட் ஆனது அஜீத் ரசிகர்கள்தான்.

ஆனால் இந்த முறை அப்படி நடந்துவிடக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ்.

தெறிக்க தெறிக்க ஒரு ட்ரெய்லரை கட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு விருப்பமாக அஜீத் தன் கருத்தை தெரிவித்தாராம்.

“படத்துல வர்ற டயலாக் ஒன்று, ட்ரெய்லர்ல வர்ற மாதிரி பார்த்துக்கோங்க” என்பதுதான் அது.

வழக்கம் போல அஜீத் கலந்து கொள்ள மாட்டார் என்பதால், இந்தப்படத்திற்கும் ஆடியோ வெளியீட்டு விழாவெல்லாம் இல்லே இல்லே இல்லே!

Most Read