திரைச்செய்திகள்
Typography

பத்மஸ்ரீ கமல்ஹாசன் எலும்பு முறிவுக்கான சிகிச்சை முடிந்து இன்று இரவு வீடு திரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமது இல்லத்தில் கமல்ஹாசன் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்தார். இதனால் முதுகெலும்பு மற்றும் கால் எலும்புகள் முறிவடைந்ததாகத், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. இத்தனை நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த கமல், இன்று இரவு சிகிச்சைப் பலனடைந்து வீடு திரும்ப உள்ளார்.

இருப்பினும், அவர் ஒரு மாதம் வரை நீடித்த ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், பின்னரே அவர் தமது பணிகளை செய்யலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர் என்று தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS