திரைச்செய்திகள்
Typography

உதயநிதிக்கு வில்லனாக நடிக்க கமிட் ஆகியிருந்தார் சத்யராஜ்.

நடுவில் என்ன நடந்ததோ...? என்னால முடியாது என்று இப்போது ஒதுங்கிக் கொண்டாராம் அவர். கெத்து படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நடித்த ஒருவர், அடுத்த படத்திலேயே அவருக்கு வில்லனாக நடித்தால், ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்றொரு கேள்வி இருந்ததல்லவா? (எங்கய்யா இருந்திச்சு?) அதனால்தான் விலகிட்டேன் என்கிறாராம் அவர். ஆவின் பாக்கெட் இல்லைன்னா ஒரு ஆரோக்கியா பாக்கெட் இல்லாமலா போய்விடும்? சற்றே காற்றாட(?) இருந்த பார்த்திபனை பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். பொதுவாகவே நடிப்பதற்கென்று உள்ளே வந்துவிட்டால், தன் கேரக்டரை செதுக்குகிறேன் பேர்வழி என்று டைரக்டரின் அடித்தொண்டை வரைக்கும் கையை விட்டு பார்க்கிற வழக்கம் பார்த்திபனுக்கு உண்டு. இந்த படத்தில் எப்படியோ? தைரியமாக சேர்த்துவிட்டார்கள். அவ்ளோதேன்... 

BLOG COMMENTS POWERED BY DISQUS