திரைச்செய்திகள்
Typography

ரஜினி பற்றி இன்னொரு செய்தி... எந்திரன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆகும்போதே, ச்சும்மா வாய்மொழியாக ஷங்கர் ஒரு விஷயத்தை வலியுறுத்தியிருந்தாராம்.

“இந்த படம் முடியும் வரைக்கும் வேறு படங்கள் எதையும் ஒப்புக் கொள்ள வேண்டாம்” என்பதுதான் அது. ஆனால் கபாலியில் ஒப்பந்தம் ஆகிற விஷயத்தை ரஜினி ஷங்கரிடம் சொல்லவேயில்லையாம். அறிவிப்புகள் வந்தபின்புதான் அறிந்து கொண்டாராம் ஷங்கர். இருந்தாலும் தன் வருத்தத்தை அவர் காட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள் திரையுலகத்தில். ஆனால் கபாலி படத்தின் ஹைப்பும், ரிலீசுக்கு அப்புறம் அந்தப்படம் குறித்து வரும் விமர்சனங்களும், சத்தியமாக தன் படத்தை பாதிக்கும் என்பது மட்டும் அவருக்கு நன்றாக புரிந்திருக்கிறது. சென்னை வந்த பின்பும் அவர் ரஜினியை சந்திக்கவும் இல்லை. சந்திப்பதற்காக ரஜினியிடன் முன் அனுமதி பெறவும் இல்லை. உடல் நிலை குறித்து விசாரிக்கவும் இல்லை என்று புதிய குண்டுகளை போடுகிறது கோடம்பாக்கம். எப்படியிருந்தாலும் எந்திரன்2 படத்திற்காக ஷங்கர் இறங்கி வந்துதானே ஆக வேண்டும்? வருவார்... வந்தே தீருவார். 

Rajinikanths Kabali Success Press Meet Photos

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்