திரைச்செய்திகள்
Typography

நியாயமாக நடக்கும் எந்த நடிகையும் செய்யாத காரியத்தை, படக்கென்று செய்துவிட்டார் ஜோதிகா.

இதனால் அவரை கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கிறது விஜய் 61 டீம். ஏன்? அட்லீ இயக்குகிற இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க மூன்று பேர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள்.

அவர்களில் ஒருவர்தான் ஜோ. சம்பளம் பேசியாச்சு. அட்வான்ஸ் கொடுத்தாச்சு.

ஒப்பந்தத்திலும் கையெழுத்து வாங்கியாச்சு. நாளைக்கு காலையில் ஷுட்டிங். இன்று இரவு ஒரு போன். அழைத்தது ஜோதிகா. “நான் இந்தப்படத்துல நடிக்கல அட்லீ. ப்ளீஸ். என்னை மன்னிருச்சுருங்க.

அதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க” என்றார். பதறிப்போன அட்லீ அந்த நள்ளிரவிலும் அவரை சந்திக்க முயன்றாராம். நோ ரெஸ்பான்ஸ்.

தவித்துப்போன படக்குழு, மறுநாள்  விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் எடுத்தது.

இந்த நிமிடம் வரை புரியாத புதிராக இருக்கிறது ஏன் ஜோ விலகினார் என்பது. இவர் இடத்தை நிரப்ப இப்போது அழைக்கப்பட்டிருப்பவர் நித்யா மேனன். இவரையாவது மதுசூதனனை நழுவ விட்ட மாதிரி விட்றாதீங்கய்யா...

BLOG COMMENTS POWERED BY DISQUS