திரைச்செய்திகள்
Typography

கடந்த வருடத்தின் நிஜமான ஹிட் என்றால் அது ‘இறுதிச்சுற்று’ படம்தான்.

சுதா கொங்கரா இயக்கிய அப்படம் தயாரிப்பு நிலையில் பட்ட அவஸ்தை கொஞ்சநஞ்சமல்ல.

எது கேட்டாலும் இல்லை என்றே பதிலளிக்குமாம் தயாரிப்பு தரப்பு. எப்படியோ... படத்தை முடித்து பம்பர் ஹிட்டாக்கிவிட்டார் சுதா.

ஒரு பெண் இயக்குனரின் படம் இவ்வளவு வசூலை குவித்தது இதுவே முதல் முறை என்கிறார்கள் புள்ளிவிபரப் புலிகள்.

போகட்டும்... இப்போது கட்டப்பட்ட கைகளை விசாலமாக்கிவிட்டது தெலுங்கு தேசம்.

இதே படத்தை தெலுங்கில் எடுத்து வருகிறார் சுதா. ஹீரோ? வெங்கடேஷ்! ஹீரோயின் ரித்திகா சிங்தான். போன முறை எதற்கெல்லாம் செலவு செய்ய ஆசைப்பட்டாரோ?

அதையெல்லாம் இஷ்டத்துக்கு செய்கிறாராம் சுதா. குத்து சண்டை நடக்கும் மிகப்பெரிய களங்களை இப்போது பெருத்த வாடகையில் அமைத்துக் கொடுத்திருக்கிறார்களாம்.

புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார் சுதா. (ஒரு ரகசியம்... இந்த சுதா யார் தெரியுமா? மறைந்த சில்க்குடன் சேர்த்து சேர்த்து பேசப்பட்டாரே ஒரு தாடிக்காரர். அவரது மகள்)

BLOG COMMENTS POWERED BY DISQUS