திரைச்செய்திகள்
Typography

திருமணத்திற்கு பின்னும் அதே ஜொலி ஜொலிப்போடு ரசிகர்களை கவர்வது அவ்வளவு ஈஸி அல்ல.

எப்படியோ... அமலாபால் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார். அவர் வழியில் நெடுஞ்சாலை ஷிவதாவும் கட்டை விரலை தூக்கி தம்ஸ் அப் காட்டிவிட்டார்.

சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த ‘அதே கண்கள்’ படத்தில் இவரது ரோல், செம செம... ஹீரோ கலையரசனுடன் இவருக்கு படு பயங்கரமான ஒரு ஆக்ஷன் சீன் இருக்கிறது. காலை நெஞ்சுக்கு நேரே நீட்டி, அவரை உதைக்கிற காட்சியில் “பொண்ணாடா இவ?” என்று ரசிகர்களை திகிலுற வைத்தார்.

படத்தை பார்த்த கோடம்பாக்க ஹீரோக்களில் பலரும், “அசத்திட்டேம்மா...” என்று பாராட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாராட்டுகள் வாய்ப்பாக மாறும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் ஷிவதா. நம்பிக்கை நிறைவேறினால் 2017 ல் ஒரு டசன் படமாவது அவருக்கு புக் ஆகும். சினிமாவுல மட்டும்தான் சோப்பு போட்டு போட்டு சட்டைய அழுக்காக்குவாங்க என்கிற உண்மையையும் அப்படியே சைட்ல நினைச்சுக்கம்மா...

BLOG COMMENTS POWERED BY DISQUS