திரைச்செய்திகள்
Typography

வர வர அனுஷ்கா தமன்னா போலானார். அதுவும் சூர்யா ஹரியே டென்ஷன் ஆகிற அளவுக்கு என்றால் என்னத்தை சொல்வது?

தன் படம் தொடர்பான பிரமோஷன்களுக்கு வராமல் தவிர்க்கிற வழக்கத்தை நயன்தாராவும் தமன்னாவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

எக்ஸ்ட்ரா பணம் கொடுத்தால் விதிகளை தளர்த்திக் கொள்கிறார் தமன்னா.

இந்த கொடூர குணம் அனுஷ்காவுக்கு வந்தது எப்படி என்றுதான் அதிர்ந்து போயிருக்கிறது சி 3 டீம். இதே ஹரி இயக்கிய முந்தைய படங்களின் போது அழைப்பதற்கு முன் ஓடோடி வந்த அனுஷ்கா, இந்த முறை கட்டையே குறுக்கே போட்டுவிட்டாராம்.

“பிரமோஷனுக்கு என்னால வர முடியாது. நிறைய வேலை இருக்கு” என்று அவர் மறுத்துவிட, கடும் கோபத்திலிருக்கிறார் ஹரி.

முன்பு இதே போல் நயன்தாரா முரண்டு பிடித்ததால்தான் அவரைப்போலவே முக சாயல் உள்ள பானுவை சினிமாவுக்கு கொண்டு வந்தார். இப்போது அனுஷ்கா சாயலில் ஆள் தேட ஆரம்பித்திருப்பாரோ?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்