திரைச்செய்திகள்
Typography

சிம்பு என்ற பெயருக்கு தமிழ் அகராதியில் அர்த்தம் எதுவாக இருந்தாலும், அதை திருத்தி ‘தனியானவன்’ என்று மாற்றிவிடலாம்.

அந்தளவுக்கு சினிமாவில் எந்த ஹீரோவுடனும் நட்பு கொள்ளாமல் விலகியிருக்க ஆரம்பித்துவிட்டார்.

பார்ட்டி பப் கலாச்சாரத்தை தொடர்ந்தாலும், அதில் ஒரு ஹீரோவும் உள்ளே இல்லை என்பதுதான் ஹாட்! சிக்கலே அங்குதான்.

போலீஸ் தாக்குதலில் அநியாயத்துக்கு பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்காக ஏதாவது செய்து நிதி திரட்டணும் என்று யோசித்தாராம்.

ஒரு கலை நிகழ்ச்சி மாதிரி ஏற்பாடு பண்ணலாம். ஆனால் நாம கூப்பிட்டா ஒரு ஹீரோவும் வர மாட்டான் என்றும் முணுமுணுத்தவர், சிங்கிளா ஆடிடுவோம் என்ற மனநிலைக்கு வந்திருக்கிறாராம்.

அதற்குள் அரசாங்கமே அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டது. நல்லவேளை... சிம்புவின் சோலோ ஆட்டத்திலிருந்து தப்பித்தது தமிழ்நாடு

BLOG COMMENTS POWERED BY DISQUS