திரைச்செய்திகள்
Typography

பிப்ரவரி 5 ந் தேதி ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா.

அதற்குள் அப்படத்தின் பாடல்கள் மீது பலமான ஒரு கல்வீச்சு. பிரபல டி.வி நடிகர் டிங்கு மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் இருவரும் இணைந்து ‘தாத்தா காரை தொடாதே’ என்ற படத்தை எடுத்து வருகிறார்கள்.

இப்படத்தின் இசையமைப்பாளராக பிரபல நடிகை ஜெயச்சித்ராவின் மகன் அம்பரீஷ் நியமிக்கப்பட்டார்.

இசைதான் இவரே தவிர, ட்யூன்களும் இன்னபிற நகாசு வேலைகளையும் அமைத்துக் கொடுத்ததே டிங்குவும் ராபர்ட்டும்தானாம்.

நடுவில் திடீரென மொ.சி.கெ.சி படத்தில் ஒப்பந்தமான அம்பரீஷ், தாத்தா காரை தொடாதே படத்திற்கு போட்ட அத்தனை பாடல்களையும் இதில் நுழைத்துவிட்டார்.

சற்று தாமதமாக இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ராபர்ட் டிங்கு இருவரும் கொதித்துப் போய்விட்டார்கள்.

கண்ணை திறந்துகிட்டு இருக்கும்போதே கல்பிரைட் ஆகிட்டாரே என்று அம்பரீஷ் மீது அநியாயத்துக்கு கொதித்தவர்கள், தங்கள் கோபத்தை படத்தின் ஹீரோ லாரன்ஸ் மீதும் காட்டிவிட்டார்கள்.

ஆனால் டிங்குவின் குற்றச்சாட்டுக்கு சரியான பதிலடி கொடுத்துவிட்டார் அம்பரீஷ்.

BLOG COMMENTS POWERED BY DISQUS