திரைச்செய்திகள்
Typography

இரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு வில்லனாக அவரது குரு அர்ஜுன் நடிக்க உள்ளாராம். 

புதுமுகம் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா ஜோடி சேரும் படம் இரும்புத்திரை. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்குமாறு விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யாவிடம் கேட்கப்பட்டது. முதலில் ஒப்புக் கொண்டவர் தனது ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என்ற பயத்தில் பின்னர் படத்தில் இருந்து விலகினார். 

இந்நிலையில் விஷாலுக்கு வில்லனாக அவரது குருவான அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுனின் வேதம் படத்தில் விஷால் அவருக்கு உதவியாளராக பணியாற்றினார். அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகமானது விஷாலின் படத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS