திரைச்செய்திகள்
Typography

மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட வகையில் லாரன்சுக்கு பேராதரவு பெருகிவிட்டது.

மாணவர்களிடையே நிஜ ஹீரோ என்று கொண்டாடப்பட்டாலும், அதன் ரிசல்ட் விரைவில் வெளிவரவிருக்கும் ‘சிவலிங்கா’ பட வசூலில்தான் பிரதிபலிக்கும்.

இதற்கிடையில் மாணவர்கள் அடிவாங்குகிற நேரத்தில் லாரன்ஸ் எங்கு போனார்? இந்த தாக்குதல் விஷயம் முன் கூட்டியே அவருக்கு தெரியுமா? இந்த போராட்டக்குழுவுக்கு ஒரு கோடி வரைக்கும் செலவு பண்ணுவேன் என்று சொன்னவர், செய்த செலவுதான் எவ்வளவு? இப்படி ஏராளமான கேள்விகளால் அவரது இமேஜை காலி பண்ணிக் கொண்டிருக்கிறது இன்னொரு குரூப்.

எதற்கும் பதில் சொல்லாமல் மவுனம் காக்கும் லாரன்ஸ், அவரது படம் வெளியாகிற நேரத்தில் வேறு பல சிக்கல்களை சந்திப்பார் என்கிறது சினிமா வட்டாரம். இதற்கிடையில் வேந்தர் மூவிஸ் மதன் தயாரித்த மொட்டை சிவா கெட்ட சிவா படம், மதனின் ஜாமீன் காரணமாக சிக்கலிலிருந்து மீள்கிறது.

ஆனால் முழுசாக மீளுமா? முள்ளாக கீறுமா? விடைக்காக காத்திருக்கிறது மீடியா.

BLOG COMMENTS POWERED BY DISQUS