திரைச்செய்திகள்
Typography

விமல் நடிக்கும் ஒரு படத்தின் இயக்குனர், அப்படத்தை 90 சதவீதம் முடித்துவிட்டார்.

கடைசி நேரத்தில் வந்த கண்றாவி இது. ஒரு சாயங்கால பொழுதில் தன் அசிஸ்டென்ட்டை அனுப்பி, “தயாரிப்பாளர்ட்ட ஆயர்ரூவா வாங்கிட்டு வா” என்றாராம்.

அவரோ “கையில சுத்தமா பைசா இல்ல. வேணும்னா கிரடிட் கார்டு இருக்கு. தர்றேன். போய் எடுத்துக்க சொல்லு” என்று சொல்ல, பெரும் கடுப்பாகிவிட்டார் இயக்குனர்.

ஊக்க மருந்துக் கடையில் கார்டு தேய்க்க மாட்டார்களே... அதனால்தான்! விருட்டென்று கிளம்பிப் போனவர் அதற்கப்புறம் ஆபிஸ் பக்கமே வருவதில்லை.

படத்தின் அடுத்தக்கட்ட வேலைகள் அப்படியே ஸ்டாப். மாம்பழத்துக்கு கோவிச்சுக்கிட்டு மலையேறலாம். ஊக்க மருந்துக்கு அடிச்சுகிட்டு தனக்கு தானே குழி தோண்டிக்கலாமா? என்று கேள்விப்படுகிற அத்தனை பேரும் உச்சு கொட்டினாலும், “எங்கிட்ட வந்துதானே ஆகணும்?” என்று பிடிவாதமாக நிற்கிறாராம் இன்னும்.

இவிய்ங்கள நம்பிதான் கோடி கோடியா கொட்ட வேண்டியிருக்கு. ஹ்ம்... உருப்படுமா இன்டஸ்ட்ரி?

BLOG COMMENTS POWERED BY DISQUS