திரைச்செய்திகள்
Typography

தியேட்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக.

மிக மிக முக்கிய காரணம், பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

போஸ்டர் காசு கூட தேறலையே என்று கதறிய படங்கள், குரல் அடங்கி குப்புற விழுந்ததால் தமிழ்சினிமாவுக்கு பல கோடிகள் நஷ்டம்.

இந்த நிலையில்தான் பைரவா முக்கி முனகி ஓடிக் கொண்டிருந்தது. அதையும் காலி பண்ண வந்தது ஜல்லிக்கட்டு போராட்டம். மொத்த இளைஞர் கூட்டமும் மாட்டுக் கொம்பை பற்றிக் கொண்டு தொங்க ஆரம்பிக்க, விஜய் ரசிகர்களே “ஸாரி.. ஒரு வாரத்திற்கு பைரவா கோஷம் கிடையாது” என்று ட்விட்டரில் அறிவித்துவிட்டார்கள்.

சொன்ன மாதிரியே ஒரு வாரம் ஜல்லிக்கட்டு தவிர வேறு எதையும் பேசவில்லை அவர்கள்.

அதனால? அதனால்தான் படம் வசூல் 100 கோடி என்று முதலில் முழங்கிய பைரவா வட்டாரம், இப்போது ஈனக்குரலில் 60 சிதான் வசூல் என்று ஆணித்தரமாக கவலைப்பட ஆரம்பித்திருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்