திரைச்செய்திகள்
Typography

சும்மாயிருக்கிற அஜீத்தை சீண்டி சீண்டி சினம் கொள்ள வைப்பதே சிலரின் வேலை போலிருக்கிறது.

போன வாரம் முழுக்க அவரது இமேஜை எண்ணை சட்டியில் போட்டு கிண்டாத குறைதான். என்னவாம்? கடைமடை பகுதி விவசாயிகள் அன்றாடம் தற்கொலை செய்து வருகிறார்கள் அல்லவா?

அவர்களின் குடும்பங்களுக்கு தற்போது நடித்து வரும் படத்தின் சம்பளத்தை வாங்கி அப்படியே கொடுத்துவிட்டார் என்பதுதான் அந்த செய்தி.

இதை அஜீத்தின் மேனேஜரே சொன்னதாகவும் ஊதிவிட்டார்கள். அவ்வளவுதான்... அவரை பாராட்டி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள் அவரது ரசிகர்கள்.

எல்லாம் டுபாக்கூர்... யாரும் நம்ப வேணாம் என்று விஜய் ரசிகர்கள் எதிர் வாளை வீச, ஏரியாவே ரணகளம். நல்லவேளையாக நடுவில் நுழைந்த மேனேஜர், “அப்படியெல்லாம் எதுவுமில்ல.

யாருப்பா கிளப்பிவிடுறது?” என்று அதட்டிய பிறகுதான் ஓய்ந்தது அமளி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்