திரைச்செய்திகள்
Typography

வாழ்க்கை முழுக்க மங்கி ஜம்ப்லேயே கழிக்க வேண்டியதுதான் போலிருக்கு.

பல மாதங்கள் கழித்து ரீ என்ட்ரி ஆன வடிவேலுவிடம், “இந்த ரீ என்ட்ரிய பற்றி என்ன நினைக்கிறீங்க?” என்று கேள்வி கேட்டது மீடியா. “நான் எங்கங்க சினிமாவை விட்டு போனேன், போனால்தானே ரீ என்ட்ரி?” என்றெல்லாம் சமாளித்தார் அவர். ஆனால் காலம் கொடூரமானதல்லவா? கத்தி சண்டை படத்தில் சூரிக்கு கிடைத்த சூப்பர் கைதட்டல் கூட வடிவேலுக்கு இல்லை. இத்தனைக்கும் சூரியின் போர்ஷனில் கை வைக்கவெல்லாம் ட்ரை பண்ணினாராம் இவர். இப்போது ரஜினியின் எந்திரன் பார்ட் டூ வில் நடிக்க அழைப்பு. மிக மிக சின்ன சீன்தான். இருந்தாலும், வர்றேன் என்று கூறியிருக்கிறாராம். அப்படியே விஜய்யும் அழைத்திருக்கிறார். பழைய கதவுகள் திறந்தாலும், வடிவேலுவின் புதிய பணிவுதான் அவரை வாழ வைக்கும் என்பதை எப்போது உணர்வாரோ?

வெத்தல போட்ட வாயில போயிலை வாசம் போவுமா? இப்போதும் வடிவேலு தன் பழைய தெனாவட்டை தொடர்வதாக கண்ணீர் வடிக்கிறது திரையுலகம். அவர் மார்க்கெட்டில் உச்சத்திலிருந்தபோது எப்படி நடந்து கொண்டாரோ? அப்படிதான் நடந்து கொள்கிறாராம். பத்து மணிக்கு மேல்தான் படப்பிடிப்புக்கு வருவார். மதியம் 1 மணியிலிருந்து 3 மணி வரை லஞ்ச் வித் ஸ்லீப்பிங். மாலை ஆறு மணிக்கு காலை பிடித்து கெஞ்சினாலும் நோ ஷாட்! ரீ என்ட்ரின்னு பார்த்தா, ரீ தண்டனையா இருக்கே என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. உஷாருண்ணே... உங்க இடத்தை மறுபடியும் விட்றாதீங்க.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்