திரைச்செய்திகள்
Typography

காதலில் தோற்ற ஹன்சிகாவுக்கு கர்சீப் கொடுத்து கண்ணீர் துடைக்க கிளம்பிய சுமார் ஒரு டசன் ஹீரோக்களின் கரங்களில் ஒரு கரத்திற்கு மட்டும் மோதிர பிராப்தம்!

சட்டென்று அந்த விரல்களை இறுகப் பற்றிக் கொண்டாராம் ஹன்சிகா.

சென்னைக்கு ஷுட்டிங் இருந்தால் மட்டுமே வருவதை வழக்கமாக கொண்டிருந்தவர், இப்போது தனியாக பிளைட் பிடித்து அடிக்கடி சென்னைக்கு வருகிறார்.

இவர் வருகிற நாளில் ஏர்போர்ட்டில் தயாராக காத்திருக்கிறார் ஹீரோ.

அப்புறம் என்ன? சிறகடிக்கிறார்கள் இருவரும்.

விஷயம் மெல்ல ஹீரோவின் குடும்பத்திற்கு தெரிய வர... ‘அடக்கமான புள்ள, இப்படி அசிங்கமா நடந்துக்குதே?’ என்று ஷாக் ஆகிவிட்டார்கள்.

சாதாரணமாகவே அட்வைஸ்களை அள்ளிவிடும் அப்பா, இந்த முறை ஓவர் டைம் போட்டு அட்வைஸ் மழை பொழிகிறாராம்.

‘எப்ப வேணும்னாலும் ஜெயம் வரும். எப்பவாவதுதான் இப்படியெல்லாம் ஃபிகர் வரும்.

இந்த உண்மையை எப்படி சொல்லி புரிய வைப்பது?’ என்பதுதான் மகனின் கவலை. என்ன செய்வது... துளசி செடியில் தூங்குமூஞ்சி இலைகள் துளிர்ப்பது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறதே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்