திரைச்செய்திகள்
Typography

கன்னிப் பருவத்திலே என்று ஒரு படம். இதில் நாயகனாக நடிகர் ராஜேஷ், நாயகியாக நடிகை வடிவுக்கரசி நடித்திருப்பார்கள்.இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கே.பாக்யராஜின் நடிப்பு அட போட வைக்கும். 

இந்த காலத்திலும் தொலைக்காட்சியில் அந்த படம் ஒளிபரப்ப பட்டால் பாக்யராஜுக்காகவே இளைஞர்கள் இந்த படத்தை விரும்பி பார்க்கிறார்கள். இந்நிலையில்தான்,நடிகர் விஷால் - மிஷ்கின் இணையும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு 65 சதவீதம் முடிந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வி்ஷாலுக்கு வில்லனாக இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் பிரசன்னா, வினய் ராய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.விஷாலுக்கு ஜோடியாக மலையாள படமான ஆக்ஷன் ஹீரோ பிஜு புகழ் அனு இம்மானுவேல் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

படத்தில் ஓர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அக்‌ஷரா ஹாசன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அஜித் படத்தில் அக்‌ஷரா பிசியாக இருப்பதால், அவருக்கு பதில் ஆண்ட்ரியாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இனி யார் நடித்தால் என்ன, நடிக்காவிட்டால் என்ன, பாக்யராஜின் வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்க ரசிகர்கள் இந்த படத்துக்காக ஆவலோடு காத்திருக்கலாம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்