திரைச்செய்திகள்
Typography

இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்துக்குப் பிறகு, மீண்டும் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். 

காமெடி நடிகர் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை தயாரித்தார் இயக்குனர் ஷங்கர். சிம்புதேவன் இயக்கினார். இப்படத்துக்கு பிறகு சக ஹீரோக்களுடன் காமெடி வேடங்களில் நடிப்பதை கைவிட்டு தொடர்ந்து ஹீரோவாக மட்டும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அரசியலில் குதித்ததுடன் விஜயகாந்துடன் மோதல் ஏற்பட்டு நடிப்பிலிருந்து ஒதுங்கினார். சுமார் 2 வருடம் நடிப்பு பக்கம் தலைகாட்டாமிலிருந்த வடிவேலு பின்னர் அரசியலுக்கு முழுக்குபோட்டார்.நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். நடிகர் விஷால்
வற்புறுத்தலுக்கு பிறகு கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடி வேடத்துக்கு மாறினார். மனநல மருத்துவர் பூத்ரியாக வேடம் ஏற்று
நடித்துள்ளார். சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.

அடுத்து விஜய் நடிக்கும் 61வது படம் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தின் 2ம் பாகம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

முதல்பாகத்தை இயக்கிய சிம்புதேவன் 2ம்பாகமும் இயக்குகிறார். ரஜினி நடிக்கும் 2.0 படப்பணிகளை முடித்துவிட்டு வடிவேலு பட தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளார் ஷங்கர். இதற்கிடையில் அப்படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கு பட்டை தீட்டும் பணியை மேற்கொண்டிருக்கிறார் சிம்புதேவன்

 

BLOG COMMENTS POWERED BY DISQUS