திரைச்செய்திகள்
Typography

தமன்னா தன் சம்பளத்தை தாறுமாறாக ஏற்றிவிட்டார்.

‘நீர் உயர நெல் உயரும்’ என்கிற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த ஏற்றம் என்றால் ஓ.கே. இதுக்கு பேர் ஏற்றம் இல்ல. எக்குதப்பு என்றெல்லாம் பல்லை நறநறக்க ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். விஷயம் என்ன தெரியுமா? சமீபத்தில் பிரபுதேவாவுடன் தேவி என்ற படத்தில் நடித்தாரல்லவா? அந்த படத்தின் சுமாரான ஹிட், டான்ஸ் மாஸ்டரை கோடம்பாக்கத்தில் அழுத்தமாக கால் ஊன்ற வைத்துவிட்டது. இன்னும் சில படங்களில் சைன் பண்ணியிருக்கிறார். அவர் ஒப்புக் கொண்ட படங்களில் எல்லாம், தமன்னாவும் இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார். இந்த வலுவான ரெகமன்ட்டேஷன்தான், தமன்னாவின் பேராசைக்கு பெரும் தீனியாக அமைந்துவிட்டது. “பிரபுதேவா வேணும்னா அதுக்கு நான் வேணும். நான் வேணும்னா எனக்கு இவ்ளோ சம்பளம் வேணும்” என்று திட்டவட்டமாக கொட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறார். யானைக்கும் அதே விலை. அங்குசத்துக்கும் அதே விலைன்னா...? அஞ்சி நடுங்குது ஏரியா.

BLOG COMMENTS POWERED BY DISQUS