திரைச்செய்திகள்
Typography

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்காத நிலையில், நடிகர் சந்தானத்துக்கு வாய்ப்புக்கள் குவிந்தன. சந்தானம் வேறு பாதையைத் தேர்ந்தெடுக்க, சூரிக்கு வாய்ப்புக்கள் குவிந்தன. 

ஆனால், இப்போது கருப்பு நாகேஷ் என்று வர்ணிக்கப்பட்ட மக்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜின் கத்தி சண்டை படத்தில் நடிகர் விஷால் நடிக்கும் படத்தில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இவருடன் நகைச்சுவை நடிகர் சூரியும் இருப்பது கூடுதல் ஸ்பெஷல்.  

படத்தின் எதிர்பார்ப்புக்குரிய அம்சமாக இருப்பது வடிவேலின் ரீ என்ட்ரிதான். மன நல மருத்துவராக நடித்துள்ள வடிவேலு, கபாலியில் வரும் நெருப்புடா பாடல் பின்னணியில் ஒலிக்க ஜில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.தீபாவளிக்கு வெளிவர உள்ள இந்த படம் காமெடி பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருந்தால் மகிழ்ச்சி!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS