திரைச்செய்திகள்
Typography

ஹன்சிகாவின் கையில் இப்போது ‘போகன்’ என்ற ஒரே படம்தான். (நல்லவேளை... இதுவாவது இருக்கே?) படத்தின் ஹீரோ ஜெயம் ரவி என்பதால், தூரத்தில் ஒரு பச்சை விளக்கு தென்படுகிறது ஹன்சிகாவின் கண்களில்.

இதற்கிடையில் இப்படம் வெளியாவதற்குள் இன்னும் இரண்டு படங்களையாவது புக் பண்ணிக் கொடுங்க என்று தனது சென்னை மேனேஜரை நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறாராம். சம்பளத்தையும் பெருமளவு குறைக்க முன் வந்திருப்பது அடிஷனல் இனிப்பு. ஆனால் அந்த இனிப்பில் கசப்பு தடவ, காஜல் முழு நேரமும் கண்காணிப்பை மேம்படுத்திவிட்டார்.

கோவில் வாசலில் எட்டணாவுக்கு சூடம் ஊற்றிவிட்டு எட்டு லட்சத்திற்கு கோரிக்கை வைக்கும் சராசரி பக்தன் போல, ஒவ்வொரு முன்னணி ஹீரோவுக்கும் அதிகாலை குட்மார்னிங்கும், மிட் நைட் குட் நைட்டும் சொல்லி வருவது காஜல்தான். இவர் ஆக்டிவாக இருக்கும்வரை, ஹன்சிகாவின் பாட்சா பலிக்கவே பலிக்காது போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS