திரைச்செய்திகள்
Typography

வீரம், வேதாளம் படத்தை அடுத்து தல அஜீத்தின் பெயரிடப்படாத, சும்மா ஏகே 57 என்று அழைக்கப்படும் படத்தையும் சிறுத்தை சிவாதான் இயக்குகிறார்.கதை, திரைக்கதையும் கூட இவர்தான். 

இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் உலா வந்துக்கொண்டு இருக்கிறது. இதனால், அஜீத் ரசிகர்கள் படு  குஷியில் இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, அஜீத்தின் இந்த படத்தில் அஜீத்துக்கு வில்லனாக விவேக் ஓப்ராய் நடிக்கிறாராம்.  

அஜீத்துக்கு வில்லனாக முதலில் அபிஷேக் பச்சன் நடிக்க இருந்ததாகவும், ஆனால், கடைசி நேரத்தில் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமானதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஒரு அஜீத்துக்கு ஜோடி காஜல் அகர்வால் என்கிறார்கள். வாலி தொடங்கி அஜீத் நடித்த இரட்டை வேட  படங்கள் அனைத்துமே மெகா ஹிட் என்பதால், இந்த படம் அஜீத் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்