திரைச்செய்திகள்
Typography

லட்சுமிராமகிருஷ்ணன் நடத்திய ஒரு நிகழ்ச்சியால், அதில் கலந்து கொண்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விஷயம் யாவரும் அறிந்ததுதான். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ், அந்த நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வெர்ஷனை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்த்தார்களாம்.

அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் மீது எவ்வித தவறும் இல்லை என்கிற உண்மையை அறிந்தவர்கள், வழக்கில் சேனலை மட்டும் சேர்த்துவிட்டு, லட்சுமியை விடுவித்தார்களாம். இப்பவும் சொல்றேன். தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் நல்லவரில்லை. அதை புகார் கொடுத்த அந்த பெண்ணே சொல்வா. நிகழ்ச்சி முடிஞ்சு கிளம்பும்போது கூட என்னோட செல்ஃபி எடுத்துகிட்டாளே... என்றார் லட்சுமிராமகிருஷ்ணன்.

கடைசியா அவர் சொன்ன விஷயம்தான் கவனத்தில் கொள்ள வேண்டியது. “ஒவ்வொரு முறை நிகழ்ச்சி முடிஞ்சு நான் வீட்டுக்கு போகும்போது அவ்வளவு மன பாரத்தோடதான் போறேன். இதை யார்ட்ட சொல்லி அழுவறது?” என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS