திரைச்செய்திகள்
Typography

‘கரிகாலன்’ என்ற படத்தை துவங்கி, அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு ‘ஐ’ படத்தில் நடிக்க போய்விட்டார் விக்ரம். அது நடந்து பல வருஷங்கள் ஆச்சு. அப்போது தனது சம்பளமாக அவர் பிக்ஸ் பண்ணியது நாலு கோடி ரூபாய்.

அதற்கப்பும் இதோ அதோ என்று கால்ஷீட் தராமல் இழுத்தடித்தே வந்தவர், ஒரு வழியாக இப்போதுதான் கொடுத்திருக்கிறாராம். படத்தை பிரம்மன் என்ற படத்தை இயக்கிய சாக்ரடீஸ் இயக்குகிறார். அப்பவே நாலு கோடி கொடுத்தாச்சு. இன்னும் கொஞ்சம் கூட போட்டுக் கொடுத்தால் போதும் என்று தயாரிப்பு தரப்பு நினைத்திருக்க, பனிரெண்டு கோடிக்கு பத்து பைசா குறைஞ்சாலும், நான் இந்தப்படத்தில் இல்ல என்று மிரட்டிவிட்டாராம் விக்ரம்.

விட்டால் இன்னும் நாலு வருஷத்துக்கு இழுப்பாரே என்கிற அச்சம் விலகாத தயாரிப்பு, இந்தாப்பூ... என்று அள்ளிக் கொடுக்க தயாராகிவிட்டது. அம்பியா உள்ள வந்து, அந்நியனா ஆட்டி வச்சா அது சரியா விக்ரம்?

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்