திரைச்செய்திகள்
Typography

ஜி.வி.பிரகாஷின் மேனேஜர் ஜெகதீஷ் ‘கல்தா’ கொடுக்கப்பட்டுள்ளார். எல்லாம் ஹோம் டிபார்ட்மென்ட் கொடுத்த குடைச்சல்தானாம். பின்னணியில் நடந்ததையெல்லாம் அலசினால், ஜி.வி யின் கான்டாக்ட் சர்டிபிகேட்டில் கன்னாபின்னாவென கோடுகள் விழும் என்கிறது கோடம்பாக்கம்.

ஏதாவது பணப்பிரச்சனையா? அல்லது மரியாதை குறைவான மற்ற மற்ற விஷயங்களா என்றால், அதுதான் இல்லை. “அந்த விஷயத்தை ஏன் நீ எங்கிட்ட சொல்லல? நீ சொல்வேன்னு நம்பிதானே உன்னை வெளிநாட்டுக்கு கூடவே அனுப்பி வைச்சேன்” என்கிறாராம் திருமதி. அட... இது என்னய்யா புதுக்கதை? வேறொன்றுமில்லை.

‘கடவுள் இருக்கான் கொமாரு’ படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒருவர் ஆனந்தி. சமீபத்தில் வெளிநாட்டுக்கு ஒரு பாடல் காட்சிக்காக போயிருந்தது யூனிட். கூடவே போயிருந்தார் மேனேஜர். நல்லபடியாக ஊர் திரும்பிய நேரத்தில்தான், மேனேஜருக்கு கல்தா கொடுத்துவிட்டார் திருமதி. தன்னால் அனுப்பப்பட்ட உளவுத்துறை சரியான ரிப்போர்ட் கொடுக்கல என்பதுதான் காரணம். ஆனால் ‘முறையான’ ரிப்போர்ட் கொடுத்த புண்ணியவான் யாரா இருக்கும் என்று தேடி வருகிறாராம் ஜி.வி.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்