திரைச்செய்திகள்
Typography

தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் நடுவில் நீங்காத பிரண்ட்ஷிப் ஒன்று இருக்கிறது.

நடுவில் அந்த நட்பை உடைக்க நினைத்த சிலரை கூட்டி பெருக்கி அனுப்பி விட்டார் தனுஷ். இவ்வளவுக்கு பிறகு அந்த நட்பு இன்னும் நெருக்கம் ஆக வேண்டும் அல்லவா? என்ன காரணத்தாலோ இருவரும் நேரில் சந்தித்து பேசியே பல மாதங்கள் ஆகிவிட்டதாம். நடுவில் அந்த சந்திப்பை தடுப்பது யார்? ஏன்? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும்... ரஜினியை வைத்து தனுஷ் தயாரிக்கப் போவதாக ஒரு புதுப்பட அறிவிப்பு வந்ததல்லவா? மனப்பூர்வமாக தன் வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் ஸ்ருதி. அது வெளியான சில நிமிஷங்களிலேயே அதை நீக்கியும் விட்டார் அவர். ஏன் போடணும்? ஏன் நீக்கணும்? இவ்விரண்டு கேள்வியை தூக்கிக் கொண்டு வம்பு கிடைக்குமா என்று அலைந்த சிலருக்கு, நிறைய்ய்ய்ய்ய கிடைத்ததாம் வம்பு. அது என்னன்னு சொல்லித் தொலைங்களேன்ப்பா! 

BLOG COMMENTS POWERED BY DISQUS