திரைச்செய்திகள்
Typography

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வாய்மை’ படத்தில் சாந்தனுதான் ஹீரோ!

கடைசி பஸ்சையும் தவற விட்ட வருத்தத்தில் அவர் இருக்க, அவரைவிட பெருத்த கவலையில் இருக்கிறார் கே.பாக்யராஜ். வெற்றி தோல்விகள் அவருக்கு புதிதல்ல என்றாலும், இந்தப்படம் பேரறிவாளன் சம்பந்தப்பட்ட படம் என்பதாலும், தூக்கு தண்டனைக்கு எதிரான படம் என்பதாலும்தான் இந்த கவலை. “படம் முடிந்ததும் எனக்குப் போட்டுக் காட்டு” என்று டைரக்டரிடம் கேட்டிருந்தாராம். பெரிய பெரிய இயக்குனர்கள் கூட இப்பவும் தங்கள் படம் ரெடியானதும் பாக்யராஜிடம் போட்டுக் காண்பித்து அவர் சொல்லும் கரெக்ஷன்களை சரி செய்து படத்தை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இந்தப்பட இயக்குனர் செந்தில்குமார், படத்தை இவருக்கு காட்டவே இல்லையாம். காட்டியிருந்தால் சரி செய்திருக்கலாம் என்று பாக்யராஜ் கவலைப்பட்டு என்ன செய்ய? வண்டிதான் இப்போ வேற ஸ்டேஷன்ல நிக்குதே? 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்