திரைச்செய்திகள்
Typography

கர்நாடகாவில் பதற்றம் அதிகரித்த அடுத்த சில மணித்துளிகளில் சென்னையிலிருக்கும் கன்னட நடிகர் நடிகைகள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுவிட்டது.

மிக மிக வருத்தமாக ஒரு வீடியோ பதிவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்தார் பிரகாஷ்ராஜ். இவரைப்போல பன்மொழி நடிகர்கள் பதறிக் கொண்டிருக்க, கன்னடப் படங்களில் மட்டுமே நடித்து வரும் சிலர்தான் ஓவர் அழிச்சாட்டியம். ஆனால் தமிழ் படங்களுடன் இப்பவும் தொடர்பில் இருக்கும் ரமேஷ் அரவிந்த் அங்கு கலந்து கொண்டு பேசியதை அதிர்ச்சி விலகாமல் கவனித்தது கோடம்பாக்கம். இத்தனைக்கும் அவர் அக்மார்க் தமிழர். சரி... ஆரம்பித்த விஷயத்திற்கு வருவோம். இப்படி பாதுகாப்பு தரப்பட்ட நடிகர்களின் வீட்டில், பாபி சிம்ஹா வீடும் ஒன்று. நிஜத்தில் இவர் கன்னடர் அல்ல. சுத்தமான தெலுங்கர். இவரையும் கன்னடர் என்று நினைத்துதான் இந்த பாதுகாப்பு. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS