திரைச்செய்திகள்
Typography

அஜீத்திற்குதான் எந்த விழாவிலும் பங்கு பெறக் கூடாது என்கிற கொள்கை இருக்கிறது.

அவரது கொழுந்தியாளுக்கு என்னவாம்? தமிழில் பல வருட கேப்புக்கு பின் அவர் நடிக்கும் ‘வீர சிவாஜி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேயில்லை அவர். “ஏம்ப்பா இந்த பொண்ணு இப்படி பண்ணுது?” என்கிற முணுமுணுப்புகள் ஒருபுறம் கேட்டுக் கொண்டிருக்க, அதையெல்லாம் தன் ஒற்றை முத்தத்தால் சரி செய்தார் ஷாம்லி. முத்தமா? யாருக்கு? படத்தின் ஹீரோ விக்ரம்பிரவுக்குதான். படத்தில் சரியனா உதட்டு கிஸ் ஒன்று இருக்கிறது. அதில்தான் உள்ளன்போடு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஷாம்லி. அந்தக் காட்சியை திரையில் காட்டிய அடுத்த நிமிஷமே ஷாம்லி அங்கு வராத கோபத்தையெல்லாம் ஜீரணித்துக் கொண்டது கூட்டம். வந்திருந்தால் எல்லாரும் இது பற்றியே பேசுவாங்க என்பதால் தவிர்த்தாரோ என்னவோ? அடுத்ததா படம் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சா (?) அந்த விழாக்களுக்காவது வாங்கக்கா! 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்