திரைச்செய்திகள்
Typography

இது என்ன மாதிரியான ஸ்டைல் என்பதை யூகிக்க முடியாமல் திணறி வருகிறது கோடம்பாக்கம். நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் போகிற எவரிடமும் அவர் கேட்கும் முதல் கேள்வி, “யார் ஹீரோ?” என்பதுதான்.

இன்னார்தான் என்று யார் பெயரை சொன்னாலும், ஒரு நிமிஷம் யோசிக்கும் அவர், “அவருன்னா நான் பண்ண மாட்டேன்” என்று கூறிவருகிறார். அதற்கப்புறம் அவருக்காக இவரை கரைக்கிற வேலை ஆரம்பம் ஆகிவிடுகிறது. அங்கே டேக் ஆஃப் ஆகிறது நயன்தாரா சம்பளம்.

“முதல்ல முடியாதுன்னு சொல்லிட்டார். கடைசியில் இப்படிதான் சம்மதிக்க வச்சோம்” என்று முடிகிறது பேச்சு வார்த்தை. இப்படி அவரால் மறுக்கப்பட்ட விக்ரமுடன் சேர்ந்து நடித்துவிட்டார் நயன். இப்போது அவரது மறுப்பு லிஸ்ட்டில் இருக்கிறார் லாரன்ஸ். பேரம் ஆரம்பம் என்கிறது இன்டஸ்ட்ரி.


BLOG COMMENTS POWERED BY DISQUS