திரைச்செய்திகள்
Typography

தமிழ்சினிமாவின் உஷார் லேடி என்றால் அது தமன்னாதான்! எந்த கிசுகிசுவுக்கும் இடம் கொடுப்பதில்லை அவர். ஆரம்பத்தில் வந்த கார்த்திக்குடனான கிசுகிசுக்கும் கூட இப்போது வேல்யூ இல்லாமல் போய் விட்டது.

அதற்கப்புறம் அவருடன் சேர்ந்து நடிக்கிற இந்த நேரத்தில் கூட அது புதுப்பிக்கப்படவும் இல்லை. அந்த விஷயத்தில் தில் தில் ஜில் ஜில்லாக தன் வாழ்வை அமைத்துக் கொண்ட தமன்னாவுக்கு, “சூறாவளி கூட என்னய்யா சகவாசம்?” என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறது ஊர்.

என்னவாம்? சிம்புவுடன் நடிக்க கமிட் ஆகியிருக்கிறாரே! ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா. பல நாள் யோசனைக்குப் பின்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் அவர். எதுக்கும் முப்பாத்தம்மன் கோவில் முடிகயிறோட நடமாடு தாயீ...

BLOG COMMENTS POWERED BY DISQUS