திரைச்செய்திகள்
Typography

அடுத்தடுத்த பட அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தனுஷ், ஏன் இப்படி அதிரடி கிளப்புகிறார் என்று விசாரித்தால்? ஹிஹி... அவரையும் இன்னொரு நடிகையையும் இணைத்து செய்திகள் வருகிறதல்லவா? அவற்றையெல்லாம் முறியடிக்கதான் இந்த திட்டமாம்.

அவரது திட்டம் செல்லுபடியானதா, இல்லையா என்பதை இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்துதான் முடிவு செய்ய வேண்டும். எப்போதெல்லாம் அந்த நடிகையின் விவகாரத்து வழக்கு ட்ரையலுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் இந்த கிசுகிசுப்பும் கிளம்புமே? இது ஒருபுறமிருக்க, கிட்டதட்ட பதினைந்து கோடி கடனில் இருக்கிறாராம் தனுஷ்.

அவர் தயாரித்த படங்கள் நன்றாக ஓடியிருந்தாலும், பலனெல்லாம் இவருக்கு இல்லை. அதை வாங்கி வெளியிட்டவர்களுக்குதான். மருமகன் கஷ்டப்படுகிறாரே என்பதால்தான் மாமனார் வலிய வந்து கால்ஷீட் கொடுத்ததாகவும் காதை கடிக்கிறது கோடம்பாக்கம். இருக்கும்ங்கிறீங்க? 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்